நாட்டில் உற்பத்திக்காக ஆயிரம் தொடக்கம் 2 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. இலங்கையில் வருடத்தில் ஒருவர் 174 முட்டைகளை நுகர்வுக்காக பயன்படுத்துகின்றனர். இந்த வருடத்தில் ஜூலை மாதம் வரையில் முட்டை உற்பத்தி 164 மில்லியன் ஆகும். இதேபோன்று கோழி இறைச்சி உற்பத்தி 18 மெற்றிக் தொன் வரை அதிகரித்துள்ளது.
இருப்பினும் ஏப்ரல் மாதத்தில் நாட்டில் கோழி இறைச்சி உற்பத்தி 21 மெற்றிக் தொன் ஆகவும் முட்டை உற்பத்தி 220 மில்லியனாக காணப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் அதாவது 2021 ஆம் ஆண்டில் நாட்டின் வருடாந்த முட்டை உற்பத்தி 2 ஆயிரத்து 934 மில்லியனாக அமைந்துள்ளது. இந்த வருடத்தில் கால்நடைகளுக்கான உணவு பற்றாக்குறை காரணமாக 1 ஆயிரத்து 963 மில்லியனாக காணப்பட்டது.