புதுடில்லி : முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீது தகுந்த உத்தரவை பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனை சமீபத்தில் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், மற்ற இரு ஆயுள் தண்டனை கைதிகளான நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரும் முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீது பதில் அளிக்குமாறு, மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம், ‘நோட்டீஸ்’ அனுப்பி இருந்தது. இதையடுத்து தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், முன்கூட்டியே விடுதலை கோரி நளினி மற்றும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement