சென்னை :உஜ்ஜயினியில், தமிழக கோவில்களை பெருமையுடன் குறிப்பிட்டு, பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில், பன்னிரு ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான மகா காளேஸ்வரர் கோவில் உள்ளது. சிப்ரா ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோவில், மிகவும் தொன்மை வாய்ந்த
சிவாலயம். உஜ்ஜயினி மகா காளேஸ்வரர் கோவில் பற்றி, தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், இது தேவார வைப்புத்தலமாக போற்றப்படுகிறது.
பிரதமர் மோடியின் முயற்சியால் மகா காளேஸ்வரர் கோவிலில், 316 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளுடன் 108 துாண்கள், சிவ புராண காட்சிகளை விளக்கும் 93 சிலைகள், பிரமாண்டமான
கோவில் வளாகம், அழகிய பாலம், அன்னதான கூடம், சமய சொற்பொழிவு அரங்கம், தாமரை குளம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.
இவற்றை, 11-ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.இந்த விழாவில்’உஜ்ஜயினி போன்ற புனித தலங்கள், பல நுாற்றாண்டுகளாக நம் தேசத்திற்கு வலிமையையும், பல செய்திகளையும் அளித்துள்ளன.
‘காசி போன்ற புனித தலங்கள் மதத்துடன், அறிவு, தத்துவம் மற்றும் கலைகளின் தலைநகரமாக இருக்கிறது. உஜ்ஜயினி போன்ற இடங்கள் வானியல் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு முக்கிய இடமாக விளங்குகிறது’ என்று பேசிய மோடி, ‘தஞ்சையில் ராஜராஜ சோழன் கட்டிய பிரகதீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்’ என்று, தமிழகத்தில் உள்ள தொன்மை வாய்ந்த கோவில்களை பெருமையுடன்குறிப்பிட்டார்.ராஜராஜ சோழன் ஹிந்துவா, இல்லையா என்ற சர்ச்சை வெடித்துள்ள நிலையில், உஜ்ஜயினியில், தமிழக கோவில்களையும், ராஜராஜ சோழனையும் குறிப்பிட்டு, பிரதமர் மோடி பேசிய ‘வீடியோ’வை, பா.ஜ.,வினர் சமூக ஊடகங்களில்பரப்பி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement