தோழியை கொன்று சூட்கேசில் அடைத்த பிரித்தானிய பெண்: பெட்டியுடன் லண்டன் வீதிகளில் சுற்றி திரிந்த பயங்கரம்!


பெண் தோழியை கொன்று சூட்கேஸில் உடலை அடைத்து இரண்டு மணி நேரம் லண்டன் தெருக்களில் சுற்றி திரிந்த பெண்.

மரணத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று 38 வயதான ஜெம்மா மிட்செல் முறையீடு. 

பெண் தோழியை கொன்று சூட்கேஸில் அவரது உடலை அடைத்து இரண்டு மணி நேரம் லண்டன் தெருக்களில் சுற்றித் திரிந்ததாக ஜெம்மா மிட்செல்(38) என்ற பெண்ணின் மீது நீதிமன்றம் குற்றம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு ஜூன் 27ம் திகதி மாலை 5 மணிக்கு முன்னதாக மீ குயென் சோங்கின் தலை துண்டிக்கப்பட்ட சடலம் சாலை ஒன்றில் விடுமுறைக்கு வந்த நபர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டது.

தோழியை கொன்று சூட்கேசில் அடைத்த பிரித்தானிய பெண்: பெட்டியுடன் லண்டன் வீதிகளில் சுற்றி திரிந்த பயங்கரம்! | Woman Murdered Friend Stuffed Her Body In Suitcase

இது தொடர்பாக பொலிஸார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், 38 வயதான ஜெம்மா மிட்செல், 67 வயதான மீ குயென் சோங்கைக் கொன்று, நீல நிற சூட்கேஸில் உடலை அடைத்து, லண்டன் தெருக்களில் இரண்டு மணி நேரம் இழுத்துச் சென்று இருப்பது சிசிடிவி மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டது.

மேலும் தேவாலயத்திற்கு சென்ற 67 வயதான மீ குயென் சோங்கை கொன்றுவிட்டு, தலையில்லாத சடலத்தை 200 மைல்களுக்கு அப்பால் தூக்கி எறிந்துவிட்டு, சொத்தை வரிசை செய்யும் முயற்சியில் போலி உயிலை உருவாக்க ஜெம்மா மிட்செல் முயன்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜூன் 2021ல் சோங்கை கொலை செய்து நீல நிற சூட்கேஸில் அடைத்து ஜெம்மா மிட்செல் தூக்கி எறிந்ததாகவும், அவரது செல்வத்தின் பெரும்பகுதியை பெற முடியும் என  கணினியில் உயிலை ஒன்றை உருவாக்கத் தொடங்கினார், ஆனால் பிரதிவாதியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் போலி உயில் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் டீன்னா ஹீர் கேசி  குற்றம் சாட்டினார்.

தோழியை கொன்று சூட்கேசில் அடைத்த பிரித்தானிய பெண்: பெட்டியுடன் லண்டன் வீதிகளில் சுற்றி திரிந்த பயங்கரம்! | Woman Murdered Friend Stuffed Her Body In Suitcase

மேலும் ஜெம்மா மிட்செல், சோங்கை கொலை செய்து அவரை நீல நிற சூட்கேஸில் அடைத்து பிரித்தானிய வீதிகளில் 2 மணி நேரம்  சுற்றி திரிந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் திரட்டப்பட்டுள்ளது, பிரேத பரிசோதனையில் குறிப்பிடத்தக்க மழுங்கிய ஆயுதம் காரணமாக மண்டை உடைந்திருப்பது தெரியவந்ததுள்ளது என நீதிமன்றத்தில் வழக்கறிஞர் டீன்னா ஹீர் கேசி தெரிவித்துள்ளார்.

சோங்கின் தலை துண்டிக்கப்பட்ட உடல் கண்டுபிடிக்கப்பட்ட சில தினங்களுக்கு பிறகு அவரது மண்டை ஓடு அருகிலுள்ள அடிமரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தோழியை கொன்று சூட்கேசில் அடைத்த பிரித்தானிய பெண்: பெட்டியுடன் லண்டன் வீதிகளில் சுற்றி திரிந்த பயங்கரம்! | Woman Murdered Friend Stuffed Her Body In Suitcase


கூடுதல் செய்திகளுக்கு: மன்னர் மூன்றாம் சார்லஸ் செயலால் அதிர்ச்சிக்குள்ளான நடிகர்கள்: NTAs 2022-யில் ஐ டிவி சோப்பிற்கு மரியாதை

ஆனால் சோங்க்-கை கொலை செய்ததை ஜெம்மா மிட்செல் மறுத்துள்ளார்,  மரணத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார், இதனால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.