புதுடில்லி, இந்திய கடற்படையின் ‘அரிஹந்த்’ நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றிஅடைந்ததாக, ராணுவம் தெரிவித்துள்ளது.
நம்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கக் கூடிய ‘அரிஹந்த்’ நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை ஏவும் சோதனை நேற்று நடத்தப்பட்டது.
வங்க கடல் பகுதியில் நடந்த இந்த சோதனையின் போது, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது.
இதன் வாயிலாக, சீனா மற்றும் பாகிஸ்தானை நீர்மூழ்கி கப்பலில் இருந்தே துல்லியமாக தாக்க முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையில், நீர்மூழ்கி ஏவுகணை அமைப்பின் அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் துல்லியமாக இயங்கியதாக ராணுவம் தெரிவித்தது.
உலக அளவில், அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய ஐந்து நாடுகள் அணுசக்தியில் இயங்கும் ஏவுகணைகள் செலுத்தும் நீர்மூழ்கிக் கப்பல்களை வைத்துள்ளன. அந்த வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement