பெப்பர் தட்டை, பக்கோடா, துக்கடா, முறுக்கு; தீபாவளி காரங்கள்! #DeepavaliKaraRecipes

தீபாவளி இனிப்புகளைச் சாப்பிட்டு திகட்டுகையில், நம் வாயும் கையும் தேடுவது கார ஸ்நாக்ஸைதான். ஸ்வீட்ஸ் ஒரு கடி, காரமான தட்டை ஒரு கடி என்று தீபாவளியைக் கொண்டாட இங்கே சில கார வகைகளின் செய்முறைகளைத் தந்திருக்கிறோம். ஹேப்பி தீபாவளி!

பாசிப்பருப்பு முறுக்கு

Deepavali Snacks

தேவையானவை:

அரிசி மாவு – 1 கப்

பாசிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்

வெண்ணெய் – 1 டீஸ்பூன்

காய்ச்சிய சூடான எண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை

எள் – 2 சிட்டிகை

சீீரகம் – 2 சிட்டிகை

எண்ணெய் – பொரிக்கத்தேவையான அளவு

செய்முறை:

பாசிப்பருப்பை வாணலியில் எண்ணெய் விடாமல் 2 நிமிடம் மிதமான தீயில் வறுத்து ஆறவிட்டு, மிக்ஸியில் பவுடராக்கிக் கொள்ளவும். அகலமான பாத்திரத்தில், அரிசிமாவு, பாசிப்பருப்பு மாவு, வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், எள், சீரகம் சேர்த்துக் கலக்கவும். இதில் காய்ச்சிய சூடான எண்ணெய் சேர்க்கவும். தேவையான தண்ணீர் தெளித்து மிருதுவான முறுக்கு மாவாகப் பிசையவும். 3 கண் உள்ள தேன்குழல் அச்சில் மாவை விட்டு, வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அதில், பிழியவும். மாவு இருபுறமும் வெந்தவுடன் எடுத்தால், வாசனையான மொறு மொறு பாசிப்பருப்பு முறுக்கு தயார்.

மினி பெப்பர் தட்டை

தேவையானவை:

அரிசி மாவு – ஒரு கப்

பொட்டுக்கடலை மாவு – கால் கப்

வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்

கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்

பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்

மிளகு – ஒரு டீஸ்பூன் (ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்)

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

Deepavali Snacks

செய்முறை:

கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடித்துவிட்டு மெல்லிய துணியில் பரப்பவும். அரிசி மாவுடன் பொட்டுக்கடலை மாவு, வெண்ணெய், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், மிளகு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதனுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, அதன் மேல் ஒரு ஜிப் லாக் கவரை வைத்து ஒரு சிறிய கிண்ணத்தால் அழுத்தவும். சிறிய மூடியால் வட்டமாக வெட்டி எடுக்கவும். இதேபோல் எல்லா மாவையும் மினி தட்டைகளாகச் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, மினி தட்டைகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

ரிப்பன் பக்கோடா

தேவையானவை:

புழுங்கலரிசி – ஒரு கப்,

கடலை மாவு – ஒரு கப்,

நெய் – 2 (அ) 3 டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,

மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

Deepavali Snacks

தேவையானவை:

புழுங்கலரிசி – ஒரு கப்,

கடலை மாவு – ஒரு கப்,

நெய் – 2 (அ) 3 டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,

மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

புழுங்கலரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, சிறிது கெட்டியாக அரைத்து எடுக்கவும். அதனுடன் கடலை மாவு, பெருங்காயத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், நெய் ஆகியவற்றை சேர்த்துப் பிசையவும். மாவை ரிப்பன் அச்சில் போட்டு, காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

மிக்சர்

எப்படி செய்வது?

கடலை மாவு – 500 கிராம்

பன்னீர் – 4 சொட்டு

மிளகாய்ப் பொடி – 50 கிராம்

பெருங்காயத்தூள் – 20 கிராம்

உப்பு – 25 கிராம்

இந்த ஐந்து பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு முறுக்குக் குழலுடன் பொருந்தும் காரச்சேவு, ரிப்பன் பக்கோடா, ஓமப்பொடி ஆகிய மூன்று வகை அச்சுகளையும் எடுத்துக் கொள்ளவும். மாவை சம அளவு பிரித்துக்கொண்டு ஒவ்வோர் அச்சிலும் காரச்சேவு, ரிப்பன் பக்கோடா, ஓமப்பொடி ஆகியவற்றை எண்ணெயில் வார்த்துப் பொரித்து தனியாக எடுத்து கலவையாக வைத்துக் கொள்ளவும்.

Deepavali Snacks

உடைத்த கடலை – 100 கிராம்

வேர்க்கடலை – 100 கிராம்

அவல் – 100 கிராம்

முந்திரி – 50 கிராம்

திராட்சை – 50 கிராம்

கறிவேப்பிலை – 25 கிராம்

இதையெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொண்டு பிறகு ஓமப்பொடி, காரச்சேவு, ரிப்பன் பக்கோடா கலவையுடன் சேர்த்து கலக்கவும். இத்துடன் சிறிது மஞ்சள் தூள், சர்க்கரை 20 கிராம், பெருங்காயத்தூள் 20 கிராம் சேர்த்து ஒரு பாத்திரத்தில் நன்கு கலந்து கொள்ள வேண்டும். இப்போது சூடான சுவையான மிக்சர் தயார்.

துக்கடா

தேவையானவை

மைதா – ஒரு கப்

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்

வெண்ணெய் அல்லது நெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

Deepavali Snacks

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர கொடுத்துள்ள அனைத்துப் பொருள்களையும் சேர்த்துக் கலந்துகொள்ளவும். தண்ணீரைச் சிறிது சிறிதாக ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு மெல்லிய சப்பாத்தியாக இடவும். பீட்சா கட்டர் அல்லது கத்தியால் சப்பாத்தியை சிறு சதுர துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வில்லைகளை ஒரு பெரிய தட்டில் தனித்தனியாக எடுத்துவைக்கவும்.

நடுத்தர சூட்டில் எண்ணெயைக் காயவைத்து அதில் மெதுவாக இந்தச் சதுரத் துண்டுகளைச் சேர்த்து, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். ஆறிய பிறகு காற்றுப்புகாத டப்பாக்களில் சேகரித்து வைக்கவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.