மும்பை:மஹாராஷ்டிராவின் மும்பை விமான நிலையத்தில் நடந்த அதிரடி சோதனையில், 8 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 15 கிலோ தங்கம் மற்றும் 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக, ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, மேற்காசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து, எமிரேட்ஸ் விமானத்தில் வந்த இந்திய பயணியிடம், 10 கிலோ தங்கம் பிடிபட்டது. இது, 5.20 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது.
அதே விமானத்தில் பயணித்த வட ஆப்ரிக்க நாடான சூடானைச் சேர்ந்த இருவர் தங்கத்தை தன்னிடம் தந்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து இரண்டு சூடான் பயணியரை அதிகாரிகள் கைது செய்தனர்.
மற்றொரு சோதனையில், ‘ஸ்பைஸ் ஜெட்’ விமானத்தில் மும்பையில் இருந்து துபாய் செல்ல காத்திருந்த இந்தியரிடம், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் கைப்பற்றப்பட்டன.
மேலும் சில பயணியரிடம் சோதனையிட்டதில் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கைப்பற்றப்பட்டன.
மொத்தம், 8 கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புடைய 15 கிலோ தங்கம்மற்றும் 22 லட்சம் ரூபாய் வெளிநாட்டு கரன்சிகள்கைப்பற்றப்பட்டன; ஏழு பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement