Airtel 5G Plus இந்தியாவில் 8 நகரங்களில் அறிமுகம். இந்த புரட்சிகரமான டெக்னாலஜி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள்

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான Airtel அதிகாரபூர்வமாக அதன் 5G சேவையை நாட்டில் அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக இந்த சேவை டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய 8 நகரங்களில் படிப்படியாக வழங்கப்படும்.

இந்த நகரங்களில் வசிக்கும் மக்கள் 5G சேவை கொண்ட போன்களுடன் இந்த Airtel 5G Plus சேவைக்கு மேம்படுத்துவதன் மூலம் அதிவேக மொபைல் இணைய வேகத்தை அனுபவிக்கமுடியும்.

இந்தியாவில் உள்ள மற்ற இடங்களுக்கு 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் இதேபோன்ற சேவை மூலம் முழு 5G சுற்றுசூழலை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது மிகவும் விரைவான சேவை ஆகும்.

எதற்கு Airtel 5G Plus சேவைக்கு மாறவேண்டும்?

இந்த நவீன காலத்தில் ஒருவிஷயம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வேண்டும் என்றால் அது சிறந்த இணைய வேகம், இது வேலை அல்லது கேம் விளையாட மிகவும் அவசியம் ஆகும்.

இந்த Airtel 5G Plus மூலம், வாடிகையாளர்களுக்கு தற்போது இருக்கும் இணைய வேகத்தை விட, சிறந்த குரல் அழைப்பு அனுபவத்துடன் 20 முதல் 30 மடங்கு அதிக இணைய வேகம் கிடைக்கும்.

இதன்மூலம் மிகப்பெரிய ஆப் போன்றவற்றையும் ஒரே நொடியில் டவுன்லோட் செய்யவும் அதேபோல மிகப்பெரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளை எந்த ஒரு தடுமாற்றமு இல்லாமல் விளையாட அனுமதிக்கிறது.

இந்த 5G டெக்னாலஜியை அனைத்து வித 5G வசதி கொண்ட போன்களில் இயங்கும் அளவிற்கு உலகம் முழுவதும் உள்ள பரந்த டெக்னாலஜி கொண்டு உருவாக்கியுள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கு செல்லும்போதும் இந்த 5G சேவையை பயன்படுத்தலாம்.

5G வசதி கொண்ட ஸ்மார்ட்போன் வைத்துள்ள வாடிக்கையளர்கள் Airtel 5G Plus சேவைக்கு தற்போதுள்ள சிம் கார்டு அல்லது மொபைல் டேட்டா திட்டத்தை மாற்றமால் உடனடியாக மாறமுடியும்.

தற்போதுள்ள ஏர்டெல் வாடிகையாளர்கள் அவர்களின் ஸ்மார்ட்போனில் உள்ள Airtel Thanks App சென்று அவர்களின் பகுதியில் இந்த 5G சேவை உள்ளதா என்று தெரிந்துகொள்ளலாம்.

ஏர்டெல் அதன் புதிய சேவையை ஒரு படி மேலே எடுத்து செல்கிறது.
இந்த Airtel 5G Plus அறிமுகம் என்பது இந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மற்றோரு சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் புதிய கண்டுபிடிப்புகளில் ஏர்டெல் நிறுவனம் பத்தாண்டுகளுக்கு மேலாக முன்னணியில் இருந்துவருகிறது.

உதாரணமாக இந்தியாவிலேயே முதல் நேரலை 5G வசதியை ஐதராபாத்தில் Bosch நிறுவனத்துடன் இணைந்து தனிப்பட்ட 5G சேவையை வழங்கி, இந்தியாவின் முதல் 5G மூலம் இயங்கும் Hologram மற்றும் 5G இணைப்பு கொண்ட Ambulance போன்றவற்றை தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து சோதனை செய்தது.

இந்த புதிய சேவை அறிமுகம் குறித்து பேசிய ஏர்டெல் நிறுவன நிர்வாக குழு தலைவர் மற்றும் CEO கோபால் விட்டல் “இந்தியாவின் தொலைத்தொடர்பு புரட்சியில் கடந்த 27 ஆண்டுகளாக ஏர்டெல் நிறுவனம் முன்னணியில் உள்ளது.

இன்றைய நாளில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க ஏர்டெல் மேற்கொண்ட பயணத்தில் கட்டமைக்கப்பட்ட சிறந்த இணைய வசதியில் இது மேலும் ஒரு படி ஆகும். எங்களை பொறுத்தவரை நாங்கள் செய்யும் அனைத்து விஷயங்களிலும் வாடிகையாளர்களே மையப்புள்ளியாக இருப்பார்கள்.

இதற்கான ஒரே தீர்வு தற்போதுள்ள Airtel வாடிகையாளர்கள் வைத்துள்ள 5G கைப்பேசிகளில் 5G இணைய சேவை வேலை செய்வது. எங்களின் எண்ணம் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்தாத 5G சேவையை வாடிகையாளர்களுக்கு வழங்குவதே ஆகும்.

Airtel 5G Plus
மக்கள் தொடர்பு, நேரலை, வேலை, இணைப்பு, விளையாட்டு போன்ற அனைத்தையும் வரும் வருடங்களில் மாற்றியமைக்கும்”. இந்த மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் அதன் 5G Plus சேவையை வாடிகையாளர்களோடு சேர்த்து சுற்று சூழலை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Disclaimer: இந்த கட்டுரை என்பது ஏர்டெல் நிறுவனத்திற்காக டைம்ஸ் இன்டர்நெட் ஸ்பாட் லைட் குழுவால் தயாரிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.