பிக்பாஸ் சீசன் 6 தமிழ் ஆரம்பமே அதளக்களமாக ஆரம்பித்திருக்கிறது. வழக்கமாக வீட்டிற்குள் வரும் போட்டியாளர்களுக்கு ஓரிரு நாட்கள் ரிலாக்ஸ் டைம் கொடுப்பார்கள். ஆனால் இந்தமுறை அவையெல்லாம் கொடுக்கப்படவே இல்லை. வந்தவுடனேயே, போட்டியாளர்களை கவர்ந்தவர்கள் யார் என ஒவ்வொருவரிடமும் கேட்ட பிக்பாஸ், குறைவான வாக்குகளை பெற்றவர்களை பிக்பாஸ் வீட்டின் வெளியே வாழைப்பழ பெட்டி படுக்கையில் இரவு முழுவதும் படுக்க வைத்தார் பிக்பாஸ். விக்ரம், ஜனனி, ஆயிஷா, தனலட்சுமி ஆகிய 4 பேரும் முதன்முதலாக தண்டனையில் சிக்கினர். மேலும் நேரடியாக நாமிநேஷன் லிஸ்டிலும் இடம்பிடித்துவிட்டனர்.
இவர்கள் இந்த லிஸ்டில் தப்பிக்க வேண்டும் என்றால் ஒரே ஒரு வாய்ப்பையும் கொடுத்திருக்கிறார் பிக்பாஸ். இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, அவர்களுக்கு பதிலாக வேறொருவரை நாமிநேஷன் லிஸ்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்காக கொடுக்கப்பட்ட டாஸ்கு தான் இப்போது களேபரமாக சென்று கொண்டிருக்கிறது.
#GPMuthu questions Dhan
#BiggBossTamil6 pic.twitter.com/6rsMCWM392
— B(@BBFollower7) October 13, 2022
டாஸ்க் ஒன்றில் ஜிபி முத்துவுக்கும், தனலட்சுமிக்கும் வாக்குவாதம் ஏற்பட இருவரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். தனலட்சுமி, ஜிபி முத்துவை பார்த்து நீங்க ஏன் நடிக்கிறீங்க என சொல்ல, கடுப்பானார் ஜிபி முத்து. நான் நடிக்கிறேனா, நான் நடிக்கிறேனா இல்லையேனானு என் நண்பர்களுக்கு தெரியும் என ஆவேசமாக கேமரா முன்பு பேசிவிட்டு, வீட்டுக்குள் சென்று அழத் தொடங்கிவிட்டார். அவரின் அழுகை மூஞ்சை பார்க்க முடியாத ரசிகர்கள், ஜிபி முத்து ஆர்மியில் சேர்ந்து தனலட்சுமியை வசைபாடத் தொடங்கிவிட்டனர்.
இது ஒருபுறம் இருக்க வீட்டிற்குள் தனலட்சுமியின் பழக்க வழக்கம் குறித்து பேசும் ஜிபி முத்து, ஒரு அப்பா தன் பிள்ளைய வா.. போன்னு கூப்பிட்டா கூட தனலட்சுமிக்கு பிடிகாதாம்மா, அது என்ன பழக்கமனுனே தெரியல என்ன வளர்ப்போ! என பேசிவிடுகிறார். அப்போது வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்கள் முத்துவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஏற்கனவே கடந்த பிக்பாஸ்களில் வளர்ப்பு பற்றி போட்டியாளர்கள் பேசியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இப்போது அதே சர்ச்சையை கொளுத்தி போட்டிருக்கிறார் ஜிபி முத்து.