தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 10% போனஸ்!
தீபாவளி பண்டிகை முன்னிட்டு அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 10% வரை போனஸ் மற்றும் கருணை தேவை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை அரசு தொழிலாளர்களின் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
இவர்களின் உழைப்பால் தான் நாடு சிறப்பான பொருளாதார வளர்ச்சியே அடைந்து வருகிறது. தமிழக அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகம் அளித்திடும் வகையில் தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாடப் பொருட்டு 2020-2021 ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015 படி போனஸ் பெற தகுதியான சம்பள உற்சவரம்பு ரு.21,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கிலிருந்து மாதாந்திர சம்பளம் உச்சவரம்பு ரூ.7000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 2020-2021ம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணை தொகையை கீழ்கண்டவாறு வழங்கப்படும்.
இலாபம் ஈட்டிய மற்றும் நட்டமடைந்துள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 1.67% கருணை தொகை என மொத்தம் 10 சதவீதம் போனஸ் மற்றும் பெருநா தொழுகை வழங்கப்படும். இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிறைந்த தொழிலாளர்களின் போனஸ் மற்றும் கருணைத்தொகை ரூ.8,400 பெறுவர். மொத்தத்தில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2,87,250 தொழிலாளர்களுக்கு ரூ 216.38 கோடி போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.