வாஷிங்டன்: உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜனநாயக கட்சியின் பிரசார குழு கூட்டத்தில் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை குறித்து ஜோ பைடன் பேசியதாக, வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்: சீன அதிபர் ஷி ஜின்பிங், தான் விரும்புவதை புரிந்து கொண்டவர். ஆனால், மிகப்பெரிய பிரச்னைகள் உள்ளன. அதை எப்படி கையாள்வது.
ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பதை ஒப்பிடும் போது, அதை எவ்வாறு கையாள்வது. எனது எண்ணப்படி, உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது. எந்தவித ஒருங்கிணைப்பும் இல்லாமல் அணு ஆயுதம் வைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா உடனான உறவை மேம்படுத்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முயற்சி மேற்கொண்டுள்ளார். இச்சூழ்நிலையில் பைடனின் இந்த பேச்சு, ஷெரீப்பின் முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனக்கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement