பத்ரிநாத் :இமயமலையில் அமைந்துள்ள பத்ரிநாத் கோவிலுக்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி, 5 கோடி ரூபாய் நன்கொடை அளித்தார்.
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான, தொழில் அதிபர்முகேஷ் அம்பானி, உத்தரகண்ட் மாநிலத்தில் இமயமலையில் அமைந்துள்ள பத்ரிநாத் கோவிலுக்கு, ஹெலிகாப்டரில் தன் நிறுவன அதிகாரிகளுடன் சென்றிருந்தார். இவர், அங்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று வழிபட்டார்.
”பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் கோவில்களின் புனரமைப்பு பணிக்காக, அம்பானி ௫ கோடி ரூபாய் நன்கொடை அளித்தார்,” என இக்கோவில்களின் கமிட்டி தலைவர் கிஷோர் பன்வார் தெரிவித்தார். நாட்டின் பல்வேறு கோவில்களுக்கு சென்று வரும் முகேஷ் அம்பானி, சமீபத்தில் ராமேஸ்வரம் மற்றும் திருப்பதி உள்ளிட்ட கோவில்களுக்கும் சென்று வழிபாடு நடத்தினார். அந்தக் கோவில்களுக்கு நன்கொடையும் அளித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement