உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் பள்ளி பேருந்தில் பதுங்கியிருந்த மாலை பாம்பை ஒருமணிநேரம் போராடி மீட்டனர். அதை மீட்கும் வீடியோ தற்போது பயங்கரமாக பகிரப்பட்டு வருகிறது.
ஒரு சர்வதேச பள்ளியைச் சேர்ந்த அந்த பேருந்தில் உள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த அவர்கள் பாம்பை பத்திரமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சீட்டிற்கு அடியில் புகுந்த பாம்பை, அவர்கள் குச்சியை பயன்படுத்தி அடித்தபோது, அவர்கள் பாம்பை பிடிக்க வைத்திருந்த சாக்குப்பையை அந்த மலைப்பாம்பு பிடிக்க பாய்ந்தது. தொடர்ந்து, இன்ஜினுக்கு அடியிலும் சென்று மறைந்துகொண்டது.
A python rescued from a school bus in Raibareli, UP. pic.twitter.com/1mP3EY9njc
— Piyush Rai (@Benarasiyaa) October 16, 2022
கயிற்றை பாம்பின் உடம்பில் கட்டி, மெதுவாக வெளியே எடுத்து ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின் அதை மீட்டனர். மேலும், ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் யாருக்கும் எந்த பிரச்சனையும் காயமும் ஏற்படவில்லை.
விடுமுறையால் பேருந்து, பள்ளி வளாகத்தில் ஓரமாக நிற்க வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை விழுங்கிவிட்டு, அந்த பேருந்தில் ஏறியதை பார்த்ததாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் பள்ளி நிர்வாகிகளிடம் தகவல் அளித்த பின்னரே, பேருந்தை வளாகத்தில் இருந்து வாசலுக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.