ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தேச விரோத செயல்களில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி மேலாளர் ஒருவரும் 4 அரசு ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக எழுந்த புகாரின் பேரில்,பாரமுல்லா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் அஃபக் அகமது வானி, காவல் துறை துணைப் பிரிவு கான்ஸ்டபிள் தன்வீர் சலீம் தார், கிராம பஞ்சாயத்து ஊழியர் சையது இப்திகார்ஆன்ட்ரபி, பாரமுல்லா நீர்வளத்துறை ஊழியர் இர்ஷத் அகமதுகான், ஹண்டுவாரா உதவி மின்ஊழியர் அப்துல் மொமின் பீர்ஆகிய 5 பேரின் செயல்பாடுகளைசட்ட அமலாக்க அமைப்புகளும்புலனாய்வு அமைப்புகளும் கண்காணித்து வந்தன. இதில் ஜம்முகாஷ்மீரின் பாதுகாப்பு நலன்களுக்கு விரோதமாக இவர்கள்செயல்படுவது கண்டறியப்பட்டதை தொடர்ந்து 5 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் ஜம்முவில் நேற்று தெரிவித்தார். அரசியலமைப்பு சட்டத்தின் 311-வது பிரிவின் கீழ் இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.