நிஜக் குந்தவையின் புகைப்படம் வைரல்: இவ்வளவு அழகா? உண்மை என்ன?

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் படம் கடந்த செப்டெம்பர் 30 ஆம் தேதி அன்று வெளியானது. தொடர் விடுமுறை தினங்களால், பொன்னியின் செல்வன் திரையிடப்பட்ட திரையரங்குகளில் பலர் குடும்பத்துடன் சென்று திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். நாவலின் கருவை கலைக்காமல் மணிரத்னம் படமாக்கியிருப்பதாகவும், காட்சியமைப்புகளிலும் சரி, லொகேஷன் தேர்வுகளிலும் சரி இயக்குநர் மணிரத்னம் கலக்கியிருக்கிறார் எனவும் பலர் கூறிவருகின்றனர். குறிப்பாக, பொன்னியின் செல்வன் படம் இந்தியாவுக்கு கோலிவுட்டிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும் சிறந்த படைப்பு எனவும் கொண்டாடினர்.

அதே சமயம், பொன்னியின் செல்வன் படத்தை படித்தவர்களில் சிலருக்கு படம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இரண்டு பாகங்களில் பொன்னியின் செல்வனை சொல்லிவிட முடியாதுதான் என்றாலும் மணிரத்னம் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் எனவும் கருத்து தெரிவித்தனர். ஆகமொத்தம் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. 

அதோடு படம் வெளியாகி 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருக்கிறது. இனிவரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இந்த படத்தில் சோழ இளவரசியின் குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் சோசியல் மீடியாவில் பயனர் ஒருவர், மலேசியா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கும் சோழ இளவரசி குந்தவையின் ஒரே அரிய புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் தான் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த பலரும், இது சோழ இளவரசி குந்தவையின் ஓவியமே கிடையாது என கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த புகைப்படம் யாருடையது என்று நெட்டிசன்கள் ஆராய்ந்த போது, அசத்தப்போவது யாரு, கருப்பசாமி குத்தகைக்காரர் திரைப்படத்தில் நடித்த நகைச்சுவை நடிகர் வெங்கடேஷ் ஆறுமுகம் என்பவர் என்று தெரிய வந்தது.  ரெட்டிட் இணையத்தளத்தில் 1872 இல் மெட்ராஸ் மாகாணத்தில் உள்ள மணப்பெண்” என்ற தலைப்பில் இந்தப் புகைப்படம் பதிவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.