சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட 1 ஆயிரத்து 661 குடும்பங்கள் தொடர்ந்தும் தற்காலிக பாதுகாப்பான தங்குமிடங்களில் தங்கியுள்ளனர்.
இடர் முகாமைத்துவ நிலையத்தின் (DMC ) அறிக்கையின்படி ,சுமார் 5 ஆயிரத்து 460 பேர் 33 இவ்வாறு தங்கியுள்ளனர்.
சீரற்ற காலநிலையால் 11 மாவட்டங்களில் 15 ஆயிரத்து 632 குடும்பங்களை சேர்ந்த 61 ஆயிரத்து 792 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக DMC தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கம்பஹா மாவட்டமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு 10 ஆயிரத்து 502 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் DMC தெரிவித்துள்ளது.
K.Sayanthiny