புதுடில்லி : நாடு முழுதும், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு அடுத்த ஆண்டு முதல் புதிய சுங்க கட்டண நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுங்க கட்டண வசூலிப்பு நடைமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அமல்படுத்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது.
அதன்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக எடை ஏற்றி வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வாகனங்கள் நெடுஞ்சாலையில் அதிக தேய்மானத்தை ஏற்படுத்துவதால், சாலைகளின் உள்கட்டமைப்பு பாதிக்கப்படுகிறது.
எனவே அதிக எடை ஏற்றி வரும் வாகனங்களுக்கு கூடுதல் சுங்க கட்டணமும், சிறிய அளவிலான எடை குறைந்த வாகனங்களுக்கு குறைவான கட்டணமும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், ‘குறிப்பிட்ட வாகனம் சாலையில் பயணிக்கும் நேரம் மற்றும் கடந்து வந்த துாரம், ஏற்றி வந்த சுமையின் எடை ஆகியவற்றை கணக்கிட்டு, அதன் அடிப்படையில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படும்’ என, டில்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement