வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பாலியால் புகாரில் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், அந்தமான் நிகோபார் தலைமை செயலாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அந்தமான் நிகோபார் அரசின் தலைமை செயலராக இருந்தவர் ஜிதேந்திரா நாராயண், இவர் மீது கடந்த ஜூலை மாதம் 21 வயது இளம் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தன்னை ஜிதேந்திரா நாராயண், தொழிலாளர் கமிஷனர் ஆகிய இருவரும் சேர்ந்த கூட்டு பலாத்காரம் செய்ததாக அந்த புகாரில் கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அதன் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
![]() |
இதையடுத்து ஜிதேந்திரா நாராயண் கடந்த ஆகஸ்ட் மாதம் இடமாற்றம் செய்யப்பட்டு டில்லியில் பணிக்கு அழைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவரை சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சிறப்பு விசாரணை குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே அந்தமான் நிகோபார் அரசு புதிய தலைமை செயலராக 1995-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். கேடரான கேசவ் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement