புதுடில்லி: ஐ.நா., சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முதன்மையான பங்களிப்பாளர்களில் ஒன்றாகும் என இன்டர்போல் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.
‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் 90வது பொது சபை கூட்டம் புதுடில்லியில் இன்று (அக்.,18) பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதையடுத்து பொதுச் சபையில் கூட்டத்தின் நினைவாக ஸ்டாம்ப் மற்றும் நாணயங்களை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

இன்டர்போல் வரலாற்று மைல்கல்லை நெருங்குகிறது. வரும் 2023ல் 100வது ஆண்டு பொன்விழா கொண்டாடப்படும். இது உலகை சிறந்த இடமாக விரைவில் மாற்றும். ஐ.நா., சபையின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா முதன்மையான பங்களிப்பாளர்களில் ஒன்றாகும்.

இந்தியக் காவல் படை 900க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் மாநிலச் சட்டங்களைச் செயல்படுத்துகிறது. கடந்த 99 ஆண்டுகளில், இண்டர்போல், 195 நாடுகளில் உள்ள போலீஸ் அமைப்புகளை உலகளவில் இணைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

சர்வதேச அளவில் போலீஸ் துறையில் நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. இன்டர்போல் அமைப்பு. ஐரோப்பிய நாடான பிரான்சின் லியான் நகரை தலைமையிடமாக வைத்து செயல்படும் இந்த அமைப்பில், 195 நாடுகள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement