இலங்கையை சேர்ந்த 396 மாணவர்களுக்கு பாக்கிஸ்தானில் உயர் கல்வி கற்கைநெறிகளைப் பின்பற்றுவதற்கு புலமைப்பரிசில்களைப் பெற்றுள்ளனர்.
கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து பாகிஸ்தானின் உயர் கல்வி ஆணைக்குழு (HEC), இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் விருது வழங்கும் நிகழ்வு கடந்த 15ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பித்த 1400 இலங்கை மாணவர்களில் 396 பேர் பாக்-இலங்கை உயர்கல்வி ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்களைப் பெற்றுள்ளனர்.
அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 237 இலங்கை மாணவர்கள் ஏற்கனவே பாகிஸ்தானில் கல்வி கற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வின் போது HEC நிறைவேற்று அதிகாரி டொக்டர் ஷைஸ்தா சோஹைல் ( Executive Director HEC Dr Shaista Sohail), பணிப்பாளர் நாயகம் (புலமைப்பரிசில்) Director General (Scholarships) HEC, ஆயிஷா இக்ராம் HEC Aayesha Ikram, மற்றும் திட்ட பணிப்பாளர் Project Director HEC Jehanzeb Khan,HEC ஜெஹான்செப் கான் ஆகியோருடன் புலமைப்பரிசில் பெற்றவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
விழாவில் உரையாற்றிய இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி (ஓய்வு)Maj-Gen Umar Farooq Burki (retd) shed அல்லாமா முஹம்மது இக்பாலின் வாழ்க்கை மற்றும் சேவைகள் பற்றி எடுத்துரைத்தார்