டெஹல்காவில் வெளிவந்த உண்மையால் ஜெயலலிதா கொலை செய்யப்பட்டாரா?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்தான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தின் மூலம் பல்வேறு உண்மைகள் வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு 2015ல் ஏற்பட்ட உடல் நலம் குறைவு முதல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இறந்தது வரை விசாரணை நடத்தி அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கெல்லாம் மூல காரணம் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை தான் இதற்கு மூலகாரணம் என ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மூலம் தெரிய வருகிறது. ஜெயலலிதா மீதான சொத்து குறிப்பு வழக்கு பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் கட்சியையும் முதல்வர் பதிவையும் அபகரிக்க சசிகலாவும் மற்றும் அவரது குடும்பத்தினர் ரகசிய சதி திட்டம் தீட்டியதாக பெங்களூரில் உள்ள டெஹல்கா என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.
அதன் அடிப்படையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா புலனாய்வுத் துறையினருக்கு இந்த செய்தி பற்றி விசாரிக்க உத்தரவிட்டிருந்தார். புலனாய்வுத்துறையினர் சசிகலா மீது குற்றம் சாட்டையை ஜெயலலிதாவிடம் அறிக்கை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. மேலும் அரசியலிலும் அதிமுக கட்சியிலும் சசிகலாவின் தலையீடு இருப்பதாக தெரிய வந்தது. இதன் காரணமாக 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போயஸ் கார்டனை விட்டு சசிகலாவை வெளியேற்றினார் ஜெயலலிதா.
அதன் பிறகு 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசி இருந்தார். சசிகலா நம்பிக்கை துரோகம் செய்ததாக வெளிப்படையாக குற்றம் சாட்டினார். அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் சசிகலாவுடன் தொடர்பில் இருக்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதன் பிறகு இருவருக்கும் இடையே உண்டான சமரசத்தால் 2012 மார்ச் மாதம் 31ஆம் தேதி ஜெயலலிதா மற்றும் சசிகலா இருவரும் போயஸ் கார்டனில் மீண்டும் ஒன்றாக வசிக்க தொடங்கியுள்ளனர். அப்பொழுது சசிகலா தரப்பில் இருந்து கட்சி விவகாரங்களை தலையிட மாட்டேன் என உறுதிமொழி அளித்ததால் மீண்டும் இணைந்ததாக கூறப்படுகிறது. சசிகலாவின் உறவினர்கள் போயஸ் கார்டனுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இருவருக்கும் இடையேயான உறவு இன்பமானதாக இல்லை, இருவரின் பிரிவுக்கு முன்னால் இருந்தது போன்ற நட்புறவு இல்லையெனவும் தெரிய வருகிறது. 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை ஒரு குழப்பமான மனநிலையிலேயே சசிகலா இருந்து வந்துள்ளார்.
இந்த தகவலை போயஸ் கார்டனில் வேலை செய்த கிருஷ்ண பிரியா, சிவகுமார், ராஜம்மாள் ஆகியோர் ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ளனர். ஆனால் டெஹல்கா பத்திரிக்கையில் வெளியான கட்டுரை உருவாக்கியவர் யார் என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
2011ல் வெளியான டெஹல்கா பத்திரிகையில் வெளியான கட்டுரையின் காரணமாக இணை பிரியா தோழிகளாகவும் உடன்பிறவா சகோதரிகளாகவும் இருந்து வந்த ஜெயலலிதா சசிகலா இடையே பிரிவை உண்டாணது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது. இதன் காரணமாக ஜெயலலிதாவின் உடல்நலத்தில் சசிகலா அக்கறை கொள்ளாமல் இருந்ததும் தெரிகிறது. மேலும் அப்போலோ மருத்துவமனை சிகிச்சையில் சசிகலா நேரடியாக தலையிட்டுள்ளது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.
அப்போலோ மருத்துவமனை அளிக்கும் சிகிச்சை தொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருக்கோ சுகாதாரத் துறை செயலாளருக்கோ எவ்வித தகவலும் மருத்துவமனை வாயிலாக தெரிவிக்கப்படவில்லை. இதனையும் சசிகலா தடுத்துள்ளதாக அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது. தன்னையும் தன் குடும்பத்தினரையும் கடுமையான வார்த்தைகளால் தாக்கி பேசிய ஜெயலலிதாவை சதி செய்து சசிகலா கொலை செய்தாரா? என்பது விசாரணையில் தெரியவரும்.