எதிர்வரும் நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கலாம்

எதிர்வரும் நாட்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கலாம்.

அத்தனகல்ல ஓயா, களனி கங்கை, களுகங்கை, கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகியவற்றை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக விளிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் (நீர் விஞ்ஞான மற்றும இடர் முகாமைத்துவ) எஸ். பீ. சீ. சுகீஷவர தெரிவித்தார்.

கங்கைகளின் நீர் மட்டம் நேற்று (17) குறைந்து, நீரோட்டம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த தினங்களில் பெய்த மழையினை அடுத்து முகத்துவாரத்தில் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மழையினால்; முகத்துவாரங்களின் எல்லைப் பிரதேசங்கள் பாதிக்கப்படலாம் அத்துடன் அதிகரித்த மழை காரணமாக சிறிய ஆறுகள் மற்றும் கங்கைகளுக்கு நீர் செல்லும் கால்;வாய்களின் நீர் மட்டம் ஒரே தடவையில் அதிகரிக்கலாம.; இதனால் இப்பிரதேச மக்கள் விளிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாடு பூராகவும், நேற்று (17) முற்பகல் 8.30மணியுடன் முடிவடைந்த 24மணி நேரத்தில்; பெய்த அதிக மழைவீழ்ச்சி கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அங்கு 150மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதாகவும்; அதில்; குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.