ஓபிஎஸ்ஸுக்கு பெருகும் ஆதரவு: சபாநாயகர் முடிவு காரணமா?

சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சி.சந்திரசேகரன் ஓ.பன்னீா்செல்வம் அணியில் நேற்று (அக்டோபர் 17) இணைந்தாா்.

சட்டமன்றத்தில் எதிர்கட்சித் துணைத் தலைவர் பதவியில் ஓ.பன்னீர் செல்வம் தொடர சபாநாயகர் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்ட நிலையில் உற்சாகமானது

தரப்பு. இந்த சூழலில் அவருக்கு கட்சியினர் மத்தியில் ஆதரவும் அதிகரித்து வருகிறது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகரன் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.

சேந்தமங்கலம் தொகுதியில் 1996-2001, 2016-2021 வரையில் சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்தவா் சி.சந்திரசேகரன். கொல்லிமலை ஒன்றியக் குழு பெருந்தலைவராக 2001-2015 இல் பதவி வகித்துள்ளாா்.

கடந்த 2021 சட்ட மன்றத் தோதலில் அதிமுக சாா்பில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தாா். கடந்த ஓராண்டுக்கும் மேலாக எந்தக் கட்சியிலும் இணையாத நிலையில், தற்போது அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் இரு அணிகள் உருவாகியுள்ளதை அடுத்து, சென்னையில் உள்ள ஓ.பன்னீா்செல்வம் இல்லத்துக்கு நேற்று தனது ஆதரவாளா்களுடன் சென்று அவரது அணியில் இணைந்துள்ளாா்.

அவரது ஆதரவாளரான மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சிவப்பிரகாசம் என்பவா் அண்மையில் திமுகவில் இணைந்தார், தற்போது திமுகவில் இருந்து விலகி ஓபிஎஸ் அணியில் தன்னை இணைத்துக் கொண்டாா்.

இவா்களை தவிர, கொல்லிமலை ஒன்றியக் குழு தலைவா் மாதேஸ்வரி, துணைத் தலைவா் கொங்கம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தனுஷ்கோடி, லட்சுமி, பாலுசாமி, பாப்பாத்தி மற்றும் நான்கு ஊராட்சிமன்ற தலைவா்கள், லேம்ப் கூட்டுறவு சங்கத் தலைவா்கள் 8 பேர், அதிமுகவைச் சோந்த 200 பேர், என பலர் சந்திரசேகரன் தலைமையில் சென்று ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.