வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சபரிமலை: சபரிமலை மேல்சாந்தியாக ஜெயராமன் நம்பூதிரியும், மாளிகைபுரத்து மேல்சாந்தியாக ஹரிஹரன் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. புதிய மேல்சாந்தி தேர்வு இன்று (அக்., 18) காலை நடந்தது.

திருவிதாங்கூர் தேவசம்போர்டு நடத்திய நேர்முகத்தேர்வில் சபரிமலை மேல்சாந்திக்கு தகுதி பெற்றுள்ள பத்து பேரில் ஒருவரும், மாளிகைப்புறம் மேல்சாந்திக்கு தகுதி பெற்றுள்ள எட்டு பேரில் ஒருவரும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஓராண்டு காலம் சபரிமலையில் தங்கி பூஜை செய்வர்.
அக்., 22 இரவு வரை பூஜைகள் நடந்து இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். அடுத்து ஒரு நாள் இடைவெளியில் சித்திரை ஆட்ட திருநாள் பூஜைக்காக அக்., 24 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். 25 ல் பூஜைகள் முடிந்து அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மண்டலகால பூஜைகளுக்காக நவ., 16 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும்.

மேல்சாந்தி தேர்வு நடந்தாலும் நேர்முக தேர்வில் தெரிவு செய்யப்படாத ஒருவர் தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இந்த தேர்வை கட்டுப்படுத்தும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement