அபுதாபியிலிருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த பயணிகளில் ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
வந்த பயணிகளில் ஆண் பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்டுள்ளார். இதனையடுத்து அவர் எடுத்துவந்த கார் சுத்தம் செய்யும் கருவியின் மோட்டரில் சோதனை செய்ததில், அதில் தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், 24 காரட்டில் 2.42 கிலோ எடையில் தங்கம் என்றதது தெரியவந்தது. இந்த தங்கத்தின் மதிப்பு 1 கோடியே 5 லட்சம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் மேத்யூ ஜாலி தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு செய்தி : மத்திய பிரதேச மாநிலத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது என்ற திட்டம் தோல்வியடைந்தது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபுல்பூர் நகரில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு மதுபானம் விற்பனை கிடையாது என்ற அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.