வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதா சென்னை மாநகராட்சி சாலைகளில் உள்ள பள்ளங்களுக்கு பேட்ச் வொர்க் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக சென்னை மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, மின்சார வாரியம் சார்பில் புதைவட கேபிள் அமைக்கும் பணி, குடிநீர் வாரிய பணிகளால் சேதமடைந்த சாலைகளில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையில் கண்டறியப்பட்டுள்ள 4916 பள்ளங்களில் 770 சென்னை மாநகராட்சி சரி செய்துள்ளது.
சென்னையில் உள்ள மொத்தம் 1792 சாலைகளில் சுமார் 85,463 சதுர அடிக்கு பேட்ச் வொர்க் செய்யும் பணி நடைபெற உள்ளது. இதற்காக வார்டு வாரியாக 5 லட்சம் ரூபாய் வீதம் சுமார் 10 கோடி ரூபாய் நிதி சென்னை மாநகராட்சியால் ஒதுக்கப்பட்டுள்ளது. பேட்ச் வொர்க் செய்யும்பொழுது சாலையை திடப்படுத்தி ஜல்லி மீது சிமெண்ட் கலவை போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சாலை மட்டத்திற்கு பேட்ச் ஒர்க் இருக்க வேண்டும் எனவும் பள்ளம் ஏற்படாத வகையில் சீரமைப்பை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.