தூத்துக்குடி நிலவரம் குறித்து இபிஎஸ்ஸுக்கு நிமிடத்திற்கு நிமிடம் தகவல் பகிர்வு: அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று இபிஎஸ் கூறியது தவறு என்றும், அவருக்கு அப்போது நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், இந்தச் சம்பவத்தில் காவல் துறை தனது அதிகாரத்தையும் வரம்பையும் மீறி செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியது தவறு என்றும், நிமிடத்திற்கு நிமிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த அறிக்கையில், “துப்பாக்கிச்சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஆனால் அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், உளவுத் துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடி நிலவரங்கள் குறித்து அனைத்து விபரங்களையும் எடப்பாடி பழனிசாமிக்கு நிமிடத்திற்கு நிமிடம் தெரிவித்தனர். எனவே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை ஊடகங்களில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று அப்போது பழனிசாமி கூறியது தவறானது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.