லண்டன், ஐரோப்பிய நாடான பிரிட்டன் பார்லி.,யில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஹிந்துக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளி, நம் நாட்டில் வரும் 24ல் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுதும் இந்தியர்கள் பரவலாக வசித்து வருவதால், பல நாடுகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் அந்நாட்டு அரசுகள் சார்பிலும் தீபாவளி பண்டிகை விழா நடத்தப்படுகிறது.
பிரிட்டன் தலைநகர் லண்டனில், அந்நாட்டு அரசு சார்பில் பார்லிமென்டில் சபாநாயகர் அறையில், நேற்று முன்தினம் மாலை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
சபாநாயகர் லிண்ட்சே ஹோய்ல், எதிர்க்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், இந்திய வம்சாவளியான எம்.பி., வீரேந்திர சர்மா, இந்திய துணை துாதர் சுஜித் கோஷ், நேபாள நாட்டின் துாதர் கியான் சந்திர ஆச்சார்யா, உகாண்டா நாட்டு துாதர் நிமிஷா மத்வானி மற்றும் ‘இஸ்கான்’ தலைவர் விசாகா தாசி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தீபாவளி கொண்டாட்டத்தின் போது விளக்குகள் ஏற்றி, வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன. அனைவருக்கும் இனிப்பு வழங்கி, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement