
பிரியாமணியின் டாக்டர் 56
திருமணத்திற்கு பிறகு வித்தியாசமான கேரக்டரை தேடிபிடித்து நடித்து வருகிறார் பிரியாமணி. அந்த வகையில் தற்போது டாக்டர் 56 என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தை ராஜேஷ் ஆனந்த் லீலா என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் பிரியாமணியின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். இப்படம் தவிர நாகசைதன்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் படம், ஹிந்தியில் அஜய் தேவ்கனுடன் மைதான் உள்ளிட்ட பல படங்களில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார் பிரியாமணி.