புதுடில்லி, ஜப்பானைச் சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான ‘நிஸான்’ இந்தியாவில் முதல் முறையாக, மூன்று எஸ்.யு.வி., வாகனங்களை, ஒரே நேரத்தில் காட்சிப்படுத்தியது.
இவற்றில், ‘நிஸான் எக்ஸ் – டிரைல்’ எனும் பிரீமியம் எஸ்.யு.வி., காரை மட்டும் சோதனை செய்து, மிக விரைவில் இந்திய சந்தையில் களமிறக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இருப்பினும், மற்ற இரு வாகனங்களான, ‘நிஸான் ஜூக்’ எனும், காம்பாக்ட் எஸ்.யு.வி., காரையும், ‘நிஸான் கஸ்காய்’ எனும் மிட் சைஸ் எஸ்.யு.வி., காரையும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.
இவை இரண்டுமே, மைல்டு ஹைபிரிட் மற்றும் மின்சார ரகங்களில் வெளிவரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது இந்த மூன்று வாகனங்களின் விபரக் குறிப்புகளை மட்டுமே நிஸான் வெளியிட்டுள்ளது. அதில், நிஸான் எக்ஸ் – டிரைல் எஸ்.யு.வி.,யில் 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினோ அல்லது 1.5 லிட்டர் ‘டர்போ பெட்ரோல் மைல்டு ஹைபிரிட்’ இன்ஜினோ இருக்கும் என்றும், மேலும் வலுவான ஹைபிரிட் மற்றும் மின்சார ரகங்களில் வெளிவரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதோடு, 5 மற்றும் 7 இருக்கைகளுடன், இரு வகைகளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில், ‘போக்ஸ்வாகன் டைகன் மற்றும் ஸ்கோடா குஷாக்’ ஆகிய எஸ்.யு.வி., கார்களுடன், இந்த வாகனம் சரிசமமாக போட்டி போட உள்ளது.
நிஸான் எக்ஸ் -டிரைல் வாகனத்தின் விலை, வகையைப் பொறுத்து 30 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement