யசோதாவுக்காக ரத்தமும், வியர்வையும் சிந்திய சமந்தா

சமந்தா நடித்து வரும் ஆக்ஷன் த்ரில்லர் படம் யசோதா. ஹரி மற்றும் ஹரிஷ் இந்தப் படத்தை இயக்கி உள்ளனர். சமந்தாவுடன் வரலட்சுமி, உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், ஷத்ரு, மாதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபடா, பிரியங்கா ஷர்மா உள்பட பலர் நடித்துள்ளனர். மணிசர்மா இசை அமைத்துள்ளார், எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படம் குறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் கூறியதாவது: 'யசோதா' இப்போதுள்ள காலத்திற்கு ஏற்ற ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதையாக இருக்கும். புதிர் மற்றும் உணர்ச்சிமயமான கதையமைப்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கொண்டு பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், இந்தப் படம் குறித்து ஒரு வார்த்தையில் கூற வேண்டும் என்றால் இருக்கை நுனியில் அமரும்படியான கதையமைப்பைக் கொண்டது.

இந்தக் கதைக்காகவும் ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் சமந்தா அவரது இரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்திருக்கிறார். இப்போதைக்கு, இந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷன் சென்சார் செய்யப்பட்டுள்ளது. மற்ற மொழிகளுக்கான சென்சார் விரைவில் முடிவடைந்து விடும். இந்தப் படத்தின் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு செலவுகளில் எந்தவொரு காரணத்திற்காகவும் நாங்கள் சமரசம் செய்யவில்லை. மிகப்பெரிய பொருட்செலவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை 100 நாட்களில் முடித்துள்ளோம். இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு வரக்கூடிய த்ரில்லர் படங்களை விரும்புபவர்களுக்கு இந்த யசோதாவை நிச்சயம் பிடிக்கும். என்றார்.

இதனிடையே யசோதா படம் வருகிற நவம்பர் 11ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.