அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

சென்னை: இன்று நடத்த திட்டமிட்டிருந்த அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. அதேபோல, வள்ளுவர் கோட்டத்தில் ஈபிஎஸ் தலைமையில் நாளை நடைபெறவிருந்த போராட்டத்திற்கும் அனுமதி வழங்கபடவில்லை. சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக அனுமதி மறுப்பு என காவல்துறை விளக்கமளித்துள்ளது. போராட்டத்திற்கு அனுமதி வழங்கக்கோரி முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடந்த சில மாதங்களாக தொடரும் உட்கட்சி மோதலில், ஈபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழுவில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். 

இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் வழங்கினார் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவுக்கும் கடிதம் அளிக்கப்பட்டது.

ஆனால், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அறிவிக்கப்படவில்லை என்று எடபபாடி தரப்பினர் வருத்தப்பட்டது. தமிழக சட்டசபை தற்போது நடந்துவரும் நிலையில், சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரினார்கள்.

இந்தக் கோரிக்கையை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆனால் சபாநாயகர் அப்பாவு இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாததால், சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியேறினார்.

திமுக தலைவர் ஆணைக்கிணங்க சபாநாயகர் அப்பாவு, ஓ பன்னீர் செல்வத்துக்குக் ஆதரவாக செயல்பட்டு வருவதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டினார். இந்தச் சூழலில் சட்டசபையில் நடத்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்த அதிமுக, இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது. இதற்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.