”இதை செய்யுங்க”.. பைக் சாகசம் செய்த மாணவருக்கு நீதிபதி கொடுத்த தண்டனை!

காரைக்குடியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவனுக்கு போக்குவரத்தை சீர் செய்ய உத்தரவிட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது காரைக்குடி குற்றவியல் நீதிமன்றம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலையில் அழகப்பா பல்கலைக்கழகம் எதிரே புதுக்கோட்டையைச் சேர்ந்த மகேஸ்வரன் என்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து பைக் சாகசத்தில் ஈடுபட்டார். இதில், பின்னால் அமர்ந்து வந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் பைக்கின் மீது ஏறி நிற்க முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
image
இந்நிலையில் சம்பவம் குறித்து மூன்று பேர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதனால் கைதுக்கு பயந்த மகேஸ்வரன் தப்பியோடிய நிலையில், இன்று காரைக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இரண்டு வார காலம் போக்குவரத்தை சீர் செய்ய வேண்டுமென்ற நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
image
அதன்படி இன்று காரைக்குடி கல்லூரி சாலையில் நின்று சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் மாணவர் ஈடுபட்டார். இதனை அவ்வழியே சென்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
imageSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.