வலப்பனை பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் 4 ஆயிரம் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் உலக உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கவுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலப்பட தெரிவித்தார்.
உலக உணவு உலக உணவுத்திட்டத்தின் உறுப்பினர் ஹெச்.பி. சோமதிலக தலைமையில் நேற்று (18) நுவரெலியா மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாவட்ட செயலாளர் இதனை கூறினார்.
வழங்கப்பட்ட பொருட்களின் அளவுகளுக்கமைய வலப்பனை பிரதேச செயலக பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து உதவியாகப் பெறப்பட்ட இந்த உதவிப் பொருட்களில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவை அடங்கியுள்ளன