கனடாவில் இந்திய வம்சாவளி தந்தையின் கொடூரம்… மூத்த மகளால் அம்பலமான பகீர் சம்பவம்


இரு சிறார்களின் மூத்த சகோதரியே இந்த கொடூர சம்பவத்தை அதிகாரிகளுக்கு அம்பலப்படுத்தியதாக…

கமல்ஜித் அரோராவின் குடியிருப்பில் இருந்து 11 வயது சிறுவன் மற்றும் 13 வயது சிறுமி ஆகியோரை குற்றுயிராக மீட்டுள்ளனர். 

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் தனது இரு பிள்ளைகளை கொலை செய்த வழக்கில் 45 வயதான இந்திய வம்சாவளி தந்தை மீது முதல் நிலை கொலை வாக்கு பதியப்பட்டுள்ளது.

மேலும், கைதாகியுள்ள அந்த தந்தை கமல்ஜித் அரோரா மீது உடல் ரீதியான துன்புறுத்தல் மேற்கொண்டதாகவும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
தனது மனைவியை கழுத்தை நெரித்து துன்புறுத்தியதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ள நிலையிலேயே அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கனடாவில் இந்திய வம்சாவளி தந்தையின் கொடூரம்... மூத்த மகளால் அம்பலமான பகீர் சம்பவம் | Laval Children Death Indian Father Charged

@Marie-Michelle Lauzon/Noovo Info

அண்டை வீட்டில் வசிக்கும் Annie Charpentier என்பவர் தெரிவிக்கையில், அந்த இரு சிறார்களின் மூத்த சகோதரியே இந்த கொடூர சம்பவத்தை அதிகாரிகளுக்கு அம்பலப்படுத்தியதாக குறிப்பிட்டார்.

வேலை முடித்து குடியிருப்புக்கு திரும்பிய நிலையில், அந்த இளம்பெண் தம்மை நாடிவந்து 911 இலக்கத்திற்கு தொடர்புகொள்ள உதவும்படி கேட்டதாகவும்,
இறுதியில் தமது மொபைலில் இருந்து நடந்த சம்பவத்தை அவர் அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியதாகவும் Annie Charpentier தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், கமல்ஜித் அரோராவின் குடியிருப்பில் இருந்து 11 வயது சிறுவன் மற்றும் 13 வயது சிறுமி ஆகியோரை குற்றுயிராக மீட்டுள்ளனர்.
இருவரையும் உடனடியாக மருத்துவமனையில் அனுப்பி வைத்துள்ளனர்.

கனடாவில் இந்திய வம்சாவளி தந்தையின் கொடூரம்... மூத்த மகளால் அம்பலமான பகீர் சம்பவம் | Laval Children Death Indian Father Charged

ஆனால், இருவரும் காயங்கள் காரணமாக மரணமடைந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஜித் அரோராவும் குற்றுயிராக மீட்கப்பட, அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

தெரியவந்த சம்பவம் தம்மை மொத்தமாக உலுக்கியுள்ளதாக Annie Charpentier தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் தான் இப்பகுதிக்கு அவர்கள் குடிவந்ததாக கூறும் Annie Charpentier, இப்படியான ஒரு சூழலை தாம் எதிர்பார்க்கவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.