சந்தையில் பல அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன – அமைச்சர் பந்துல குணவர்தன

சந்தையில் பல அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாக அமைச்சரவை போச்சாளரும் அமைச்சருமான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ,

செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். அதன்படி,

 ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 685 ரூபாயில் இருந்து 398 ரூபாவாகவும்,
 ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசியின் விலை 220 ரூபாயில் இருந்து 165 ரூபாவாகவும்,
 ஒரு கிலோகிராம் பச்சரிசியின்; விலை 210 ரூபாயில் இருந்து 160 ரூபாவாகவும்,
 ஒரு கிலோ கிராம் சீனியின்; விலை 375 ரூபாயில் இருந்து 275 ரூபாவாகவும்,
 ஒரு கிலோகிராம் கோதுமையின் விலை 395 ரூபாவிலிருந்து 275 ரூபாவாகவும்
குறைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் பந்துல குணவர்தன இங்கு தெரிவித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.