சர்க்கரை நோயாளி ஜெயலலிதாவுக்கு ஐஸ் கிரீம், இனிப்புகள்! அறிக்கை தொடர்பில் மெளனம் கலைத்த சசிகலா


அதிர்வலையை கிளப்பிய ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை.

ஜெயலலிதா மரணம் தொடர்பிலான சர்ச்சை தொடரும் நிலையில் மெளனம் கலைத்த சசிகலா.

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பில் சசிகலா மெளனம் கலைத்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை, சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிப்பதை சசிகலா தடுத்ததாகவும், சர்க்கரை நோயாளியான அவருக்கு இனிப்புகள், கேக், ஐஸ் க்ரீம் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையில் ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அரிசியலாக்குவதை பொதுமக்கள் யாரும் ஏற்கமாட்டார்கள் என வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.
ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கைக்கு பதில் தெரிவித்து வி.கே. சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “நியாயம் தோற்காது, உண்மைக்கு என்றும் வலிமை அதிகம். அதைவிட என் அக்கா, நம் இதயதெய்வம் அம்மா அவர்கள் என் அருகிலேயே இருந்து நடப்பவை எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

சர்க்கரை நோயாளி ஜெயலலிதாவுக்கு ஐஸ் கிரீம், இனிப்புகள்! அறிக்கை தொடர்பில் மெளனம் கலைத்த சசிகலா | Sasikala Jayalitha Arumugam Commission

என் மீது பழி போடுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது போன்று என் மீது பழிபோடுவது எனக்கு ஒன்றும் புதிது இல்லை என்று கூறிய அவர், என்றைக்கு நான் அம்மா அவர்களின் கரத்தை பிடித்தேனோ அன்றே ஆரம்பமானது இந்த பழிபோடும் படலம் என தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவிற்கு புகழஞ்சலி செலுத்துவதற்கு பதிலாக, அவருடைய மரணத்தையே அரசியலாக்கினார்கள் திமுகவினர். அதற்கு நம் கட்சியினரையே பலிகாடாக ஆனது தான் வேதனையான ஒன்று என கூறியுள்ளார்.
இந்த ஆணையத்தின் அறிக்கையில் குறிப்பிட்டது போல் அம்மாவின் மருத்துவ சிகிச்சையில் ஒரு போதும் நான் தலையிட்டதில்லை, அவ்வாறு கருத்துக்களை சொல்லக்கூடிய அளவுக்கு மருத்துவ படிப்பு நான் படித்தது கிடையாது. எந்த விதமான பரிசோதனைகளை செய்ய வேண்டும் என்ற முடிவை மருத்துவ குழுவினரே தான் முடிவெடுத்து சிகிச்சை வழங்கினார்கள்.

என்னுடைய நோக்கமெல்லாம் அம்மாவுக்கு முதல் தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தான். என்னுடைய ஆலோசனைகளை பெற்று மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடிய அளவில் அப்பல்லோ மருத்துவமனை ஒரு சாதாரண மருத்துவமனை கிடையாது என தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.