நேற்று பாவூர்சத்திரத்தில் இருந்து ஆலங்குளம் வழியே தூத்துக்குடிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் இருக்கைகள் நெருங்கி வழிந்த நிலையில், நின்று கொண்டிருந்த பயணிகளின் கூட்டமும் மிக அதிகமாக இருந்தது.
அப்போது, அப்பகுதியில் கன மழை பெய்தது. எனவே ஓட்டை ஓட்டையாக இருந்த பேருந்துக்குள் தண்ணீர் வழிந்தது. இதில் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த நபர்கள் பலரும் சீட்டில் மழை பொழிகிற காரணத்தால் அமர முடியாமல் எழுந்து நின்று பயணம் செய்தனர்.
மழைக்காலம் என்பதால் தற்காப்புக்காக எடுத்து வந்த குடைகளை பலரும் பேருந்துக்குள்ளையே பிடித்துக் கொண்டு பயணம் மேற்கொண்டனர். அரசு சார்பில் புதிய புதிய பேருந்துகள், சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் பழைய பஸ்களை முறையாக பராமரிக்காத காரணத்தால் இப்படி எல்லாம் நடக்கிறது என்று பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மழைக்காலங்களில் மேற்கூரை ஒழுகுகின்ற பேருந்துகளை அப்புறப்படுத்தி விட்டு நல்ல பேருந்துகளை இயக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.