
திருமணம் எப்போது? : தமன்னா சொன்ன பதில்
தமிழில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கிறார் தமன்னா. அதோடு தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்து வருகிறார். குறிப்பாக அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு சிங்கிள் பாடலுக்கு தமன்னா தான் நடனம் ஆடப்போகிறார். இந்த நிலையில் தமன்னா அளித்த ஒரு பேட்டியில், திருமணம் குறித்த கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார்.
அதில், ‛‛என்னுடைய பெற்றோர் திருமணம் செய்து கொள்ள சொல்லி வலியுறுத்தி வருகிறார்கள். எனக்கும் எல்லா பெண்களையும் போன்று திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. என்றாலும் தற்போது நான் சினிமாவில் ரொம்ப பிசியாக இருக்கிறேன். குடும்பத்தினருடன் பொழுதை கழிக்க கூட எனக்கு போதுமான நேரமில்லை. அந்த வகையில் இப்போதைக்கு எனது கவனம் எல்லாம் சினிமா மீது மட்டும்தான் உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருப்பதே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது . அதனால் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்வதாக எந்த ஐடியாவும் இல்லை'' என்கிறார் தமன்னா.