திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோவிலுடன் திருச்சானுாரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலும் சூரிய மற்றும் சந்திர கிரகணத்தின் போது மூடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அக்., 25ம் தேதி மாலை 5:11 மணி முதல், 6:27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது.
அதனால் அன்று காலை 8:00 மணிமுதல் மாலை 7:00 மணிவரை தொடர்ந்து 11 மணிநேரம் பத்மாவதி தாயார் கோவில் மூடப்பட உள்ளது. கிரகண காலம் நிறைவு பெற்ற பின் கோவில் கதவுகள் திறக்கப்பட்டு, சுத்திகரிப்பு, பூஜை, கைங்கர்யம் ஆகியவை நடக்க உள்ளது.
அதேபோல் வரும் நவ.,8-ம் தேதி மதியம் 2:39 மணி முதல், 6:27 மணி வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இதனால் பத்மாவதி தாயார் கோவில், காலை 8;00 மணி முதல், இரவு 7:00 மணி வரை என மூடப்பட்டிருக்கும். இதனால் இந்த நாட்களில் தாயாரின் தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரத்து
அக்., 25ல் சூரிய கிரகணம் மற்றும் நவ., 8ல் சந்திர கிரகணம் நிகழ உள்ளதால், தர்ம தரிசனம், சிறப்பு நுழைவு தரிசனம், இடைவேளை தரிசனம் உள்ளிட்ட அனைத்து திட்டமிடப்பட்ட சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement