நியூயார்க், :பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதி ஷாஹித் மகமூதை, சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் முயற்சிக்கு, சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சிலரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து, தடை விதிக்கப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
இது தொடர்பாக, கடந்த நான்கு மாதங்களில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தாக்கல் செய்த மூன்று மனுக்களுக்கு, நம் மற்றொரு அண்டை நாடான சீனா முட்டுக்கட்டை போட்டது.
இந்நிலையில், லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியான ஷாஹித் மகமூதை, 42, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியா மற்றும் அமெரிக்கா இந்த மனுவை தாக்கல் செய்தன. பாகிஸ்தானின் மிகவும் நெருங்கிய கூட்டாளியான சீனா, இதற்கு முட்டுக்கட்டை போட்டு, தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதையடுத்து, இந்த தீர்மானம் தோல்வியடைந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement