பிர்பும் மேற்கு வங்கத்தில், ஓடும் ரயிலில் இருந்து இளைஞர் ஒருவரை வெளியே துாக்கி எறிந்த நபரை, போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்கத்தின் பிர்பும் மாவட்டத்தில் தாராபித் – ராம்புர்ஹாத் ரயில் நிலையத்துக்கு இடையே, கடந்த ௧௫ல் ஹவுரா மால்டா நகர் இன்டர்சிட்டி விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, ஒரு பெட்டியில் பயணியருக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், இளைஞர் ஒருவரை மற்றொரு பயணி துாக்கி வெளியே எறிந்தார்.
இது சம்பந்தமான ‘வீடியோ’ வேகமாகப் பரவி வருகிறது. அதில், சஜல் ஷேக் என்பவருக்கும், மற்றொரு நபருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.
பின், ஷேக் ஏதோ கூறியதில் கோபமடைந்த அந்த நபர், எழுந்து சென்று ஷேக்கின் சட்டையை பிடித்து துாக்கி, ஓடும் ரயிலில் இருந்து வெளியே எறிந்துவிட்டு, ஏதும் அறியாதவர் போல் தன் இருக்கை திரும்புவது பதிவாகிஉள்ளது.
பலத்த காயமடைந்து ரயில் தண்டவாளத்தில் கிடந்த சஜல் ஷேக்கை, ரயில்வே போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து விசாரித்த போலீசார், அந்த நபரை கைது செய்தனர். அவரைப் பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement