22வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நாளை மற்றும் நாளை மறுதினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக் க்ஷ குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரினால் முன்வைக்கப்பட்ட இரண்டு திருத்தங்களைத் தவிர, 22ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்தில் ஏனைய திருத்தங்களை சேர்ப்பதற்கான எதிர்பார்ப்பு இல்லை என்று, (17) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.