டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் செயலாளர் மதுசூதன் மிஸ்திரி அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் 17ந்தேதி நடைபெற்றது. தலைவர் பதவிக்கான போட்டியில் மூத்த காங்கிரஸ் தலைவரான 80வயது மல்லிகார்ஜுன கார்கேவுக்கும், கேரள மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இடையே போட்டி நிலவியது. இதையடுத்து, கடந்த 17ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, இன்று (19ந்தேதி) வாக்கு எண்ணிக் கடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையில், கார்கே பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதைதேர்வுபிரிவுசெயலாளர்அதிகாரப்பூர்வமாகஅறிவித்துஉள்ளர்.
இதுதொடர்பாகஅவர்வெளியிட்டுள்ளஅறிவிப்பில், 17ந்தேதி நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 9,385 வாக்குகள் பதிவானதாகவும், அதில் 7,897 வாக்குகள் பெற்று மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரான சசிதரூர் 1072 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளதாகவும், பதிவான வாக்குகளில் 416 வாக்குகள் செல்லாததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சட்டத்திட்டத்தின்படி, தேர்தலில் வெற்றிபெற்ற மல்லிகார்ஜூன கார்கே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
7,897 வாக்குகள்; அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் 80வயது மல்லிகார்ஜூன் கார்கே….