வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் மெகா வேலைவாயப்பு மேளாவை பிரதமர் மோடி அக். 21 ம் தேதி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவக்கி வைக்கிறார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி தனது அமைச்சரவையில் பல்வேறு துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்கள் , மற்றும் ஒதுக்கப்பட்ட பணியிடங்களை நிரப்புமாறு சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
![]() |
இந்நிலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி, ரோஸ்கர் மேளா’ எனப்படும் மெகா வேலைவாய்ப்புத் திருவிழாவை பிரதமர் மோடி அக்.21ல் துவக்கி வைக்கிறார். இதில் நாடு முழுவதும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பங்கேற்கின்றனர். இந்த வேலை வாயப்பு மேளாவில் தேர்வு செய்யப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 75,000 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இந்த மெகா வேலை வாய்ப்பு மேளாவில் பங்கேற்று தேர்வு பெற்றவர்கள், நாடு முழுதும் உள்ள மத்திய அரசுத்துறைகளில் பணியமர்ந்தப்படுவர். இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement