அப்படியே இருக்கிறார் – விஜய் குறித்து மனோபாலா நெகிழ்ச்சி

நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை  மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடிப்பதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள்  நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது. படத்தில் பிரபு, சரத்குமார், ஷ்யாம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தில்ராஜூ படத்தை தயாரிக்கிறார்.

படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தச் சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகுமென்று ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் விதமாக சமீபத்தில் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இசையமைப்பாளர் தமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் புகைப்படத்தை பகிர்ந்து தீபாவளி என்று குறிப்பிட்டிருந்தார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாவதைத்தான் தமன் இவ்வாறு கூறியிருக்கிறார் என பதிவிட்டுவந்தனர். 

இதனையடுத்து சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சிவகார்த்திகேயன் மற்றும் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவுடன் ‘பிரின்ஸ்’ படத்தில் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட தமன், இந்த தீபாவளிக்கு ‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என்பதை உறுதி செய்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான மனோபாலா விஜய் குறித்து செய்திருக்கும் ட்வீட் வைரலாகியுள்ளது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வாரிசு படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய்யை சந்தித்தேன். அவர் அப்படியே இருக்கிறார். நடனம் ஆடும் போது அதிக உத்வேகம். 15 நிமிட சந்திப்பு புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும் எனக்கு கொடுத்தது” என பதிவிட்டிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.