ஈரோடு : நேற்று இரவு 7 மணி அளவில், தவிட்டுப்பாளையம், அந்தியூர்-அத்தாணி சாலையின் நடுவே, 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் படுத்து உருண்டு சத்தமிட்டு கொண்டிருந்தார்.
அந்தப் பெண் மது போதையில் சாலையில் ரகளை செய்து கொண்டிருப்பதை அறிந்த வாகன ஓட்டிகள், அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
தலைக்கேறிய நிலையில் இருந்த அந்த பெண், சிறிது நேரத்தில் மீண்டும் சாலையில் நடுவே வந்து படுத்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டார்.
போதையில் இருந்தாலும் குடிமகன்களுக்கு ஆதரவாக, ஒரு சக குடிமகளாக, அந்தியூர் அரசு மதுபான கடையில், அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதலாக 15 ரூபாய் வாங்குவதாகவும், அந்த கூடுதல் தொகைக்கு என்ன செய்வார்கள் குடிமகன்கள். இந்த அநியாயத்தை யார் தட்டி கேட்பது” என்று குரல் கொடுத்துக்கொண்டிருந்தார்.
பின்னர் தகவலறிந்து வந்த அந்தியூர் காவல் நிலைய போலீசார், அந்த பெண்ணை மீட்டு, அவருக்கு உணவு வாங்கிக் கொடுத்து வீட்டிற்கு வழி அனுப்பி வைத்தனர்.