சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு உட்பட பல்வேறு பணிகளில் போலீசார் ஈடுபடுகின்றனர். போலீசாரின் உயிர் தியாகத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அக். 21-ல் தேசிய போலீஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
1959 அக்.21-ல் லடாக் எல்லையில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் 10 இந்திய போலீசார் வீர மரணம் அடைந்தனர். இவர்களின் தியாகத்தை அங்கீகரிக்கும் விதமாக இத்தினம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் உயிர் தியாகம் செய்த போலீசாரின் நினைவாக டில்லயில் புதுப்பிக்கப்பட்ட தேசிய போலீஸ் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement