உடல் எடையை குறைத்து ரூ. 32 ஆயிரம் கோடிகளை பெற்ற எம்பி!

உடல் எடையை குறைத்தால் கோடிக்கணக்கில் பணம் தருகிறேன் என்று யாரவது நம்மிடம் சொன்னால் அந்த சவாலை நம்மால் ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியுமா? உடனே அந்த சவாலை ஏற்றுக்கொண்டு அதை செய்துமுடித்துவிட மாட்டோமா, அப்படித்தான் உஜ்ஜைன் எம்பி அனில் ஃப்ரோஜியா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் சவாலை ஏற்றுக்கொண்டு 32 கிலோ உடல் எடையை குறைத்து கோடிக்கணக்கிலான தொகையை பரிசாக பெற்றிருக்கிறார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019ம் ஆண்டு ‘ஃபிட் இந்தியா’ இயக்கத்தை தொடங்கினார், இதன் முக்கிய நோக்கம் மக்கள் தங்களது உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதேயாகும்.  

இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பொது நிகழ்ச்சி ஒன்றின் மேடையில் பேசுகையில், உஜ்ஜைன் எம்.பி அனில் ஃப்ரோஜியா இழக்கும் ஒவ்வொரு கிலோ எடைக்கும் ரூ.1000 கோடி உஜ்ஜைனின் வளர்ச்சி பணிக்கு தருவதாக கூறினார்.  அவரது சவாலை ஏற்றுக்கொண்டு நான் கடுமையாக உடற்பயிற்சி செய்து கிட்டத்தட்ட 32 கிலோ எடையை குறைத்திருக்கிறேன்.  மத்திய அமைச்சர் வாக்குறுதி அளித்தபடி நிதியை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.  மேலும் தான் உடல் எடையை இழக்க செய்தவற்றையும் பகிர்ந்துகொண்டுள்ளார், அவர் அதிகாலையில் 5:30 மணிக்கு எழுந்து நடைப்பயிற்சி, ஓடுதல் மற்றும் யோகா போன்ற பயிற்சிகளை செய்வாராம், ஆயுர்வேத முறைப்படி உணவுகளை சாப்பிடுவதாகவும், காலை மற்றும் இரவில் சாலட், பச்சை காய்கறிகள் மற்றும் 1 ரொட்டி மட்டுமே சாப்பிட்டும், இடையில் கேரட் சூப் அல்லது உலர் பழங்களை சாப்பிட்டும் தனது எடையை குறைத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் உஜ்ஜைனின் வளர்ச்சி பணிக்காக அதிக பட்ஜெட் ஒதுக்கினால் நான் எவ்வளவு வேண்டுமானாலும் எடையை இழக்க தயாராக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.  உடல் எடையை குறைத்தது பற்றி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து பேசியதாகவும், அவர் அதை கேட்டு மிகவும் மகிழ்ச்சியுற்று ரூ.2,300 கோடியை உஜ்ஜைன் வளர்ச்சி பணிக்கு ஒதுக்குவதாக ஒப்புதல் அளித்துள்ளதாகவும் உஜ்ஜைன் எம்பி அனில் ஃப்ரோஜியா கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.