எரிபொருளின் தரம் குறித்து ஆய்வுகள்

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழங்கப்படும் எரிபொருளின் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட உள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) , நுகர்வோர் அதிகாரசபை மற்றும் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் ஆகியன இணைந்து நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைகளுக்குட்படுத்த உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க கூறியுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் விநியோகிக்கும் எரிபொருள்களின் தரம் குறித்து அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதால் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோலிய பொருட்களில் தண்ணீர், மண்ணெண்ணெய் மற்றும் பிற திரவங்கள் கலக்கப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆய்வுகளின் போது எரிபொருள் குழாய்களும் (Pumbs) ஆய்வுக்குட்படுத்தப்படும் எனவும் PUCSL தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.